அகலவத்தை – வந்துரப்ப பிரதேசத்தில் தம்பதியினர் திடீரென உயிரிழந்துள்ளதாக அகலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகலவத்தை, வந்துரப்ப பிரசேதச்தில் வசிக்கும் 59 வயதுடைய வன்னி ஆராச்சிகே உபாலி டயஸ் மற்றும் அவரது மனைவி சந்திரிகா அமரசிங்க ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் வாந்தி பேதியால் கணவன், மனைவி தொடர்ச்சியாக அவதிப்பட்டு வந்த நிலையில், கணவன் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத்தொடர்ந்து களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது மனைவி நேற்று (27) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.