இன்றைய தினம் தேசிய எதிர்ப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று நண்பகல் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் சமந்த கோரளேராச்சி தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் பணி, பதவி உயர்வு மற்றும் இடமாற்றங்களுக்கு கடுமையான நடைமுறை, போக்குவரத்துக் கொடுப்பனவு உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
கடந்த ஒரு மாத காலமாக சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரனவுடன் கலந்துரையாடல் தொடர்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் பதில் கிடைக்கவில்லை என கோறளேராச்சி தெரிவித்தார்.
மேலும் மருத்துவமனை ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.