72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று(13) காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்கள் வைத்தியர்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் மேலதிக கொடுப்பனவு, தமக்கும் வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தி பல தடவைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதையடுத்து நிதி அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததன் காரணமாக மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.