இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் உயர் அதிகாரிகள் இடையே நேற்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் முக்கியமான கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த சந்திப்பில், சுங்கச் செயல்முறையின் சிக்கலான தன்மையால் உருவான பிரச்சனைகள், மற்றும் அவற்றுக்கு தீர்வுகள் காணும் வழிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. 2030ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார இலக்குகளை அடைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக, சுங்கத் திணைக்களத்தின் செயல்பாடுகளை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்கள் மற்றும் அதில் தோன்றும் சவால்கள் பற்றி அலசப்பட்டது.

ASYCUDA எனும் தற்போதைய கணினி அமைப்பின் குறைபாடுகள், தேசிய ஒற்றைச் சாளர திட்டம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பதிவுகள், வரி விலக்குகள் மற்றும் வருமானத்தை துல்லியமாக கணிப்பது உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும், இலத்திரனியல் வணிகம் (e-commerce) துறையில் உருவாகியுள்ள சிக்கல்களும் விவாதிக்கப்பட்டு, நுகர்வோருக்கான துரித மற்றும் நியாயமான தீர்வுகளை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு தன்னிச்சையான அறிவுறுத்தலை வழங்கினார்.

இந்த சந்திப்பில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, நிதி செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் டிஜிட்டல் ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here