சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (17.08) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு 13 பிரதேசத்தை சேர்ந்த 49 வயதுடைய நபராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 6,000 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மேலதிக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.