Tamil News Channel

சுற்றாடல் முன்னோடி ஆலோசகர் மற்றும் ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டனர்..!

IMG-20240607-WA0087

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2016/27 சுற்றறிக்கைப்படியும், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும் மூன்று வருடங்களுக்கு (2024- 2026) செயற்படும் வண்ணம் யாழ் மாவட்டத்தில் சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகர், சுற்றாடல் முன்னோடி வலய மற்றும் கோட்ட ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (07.06.24) யாழ் மாவட்ட செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் து.சுபோகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இதில் பிரதம விருந்தினராக மாகாணக் கல்வித்திணைக்கள விஞ்ஞானப் பாட பிரதிக் கல்விப்பணிப்பாளரும், மாகாண சுற்றாடல் முன்னோடி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தருமான அ.நிருபராணி கலந்து கொண்டுள்ளார்.

இந் நிகழ்வில் யாழ்மாவட்ட சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகராக ப.அருந்தவமும்.

யாழ் கல்வி வலயசுற்றாடல் முன்னோடி ஆணையாளராக திருமதி.எஸ்.நவராஜாவும், தீவக வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக திருமதி.மேரி ரீத்தாவும்.வடமராட்சி கல்வி வலயசுற்றாடல் முன்னோடி ஆணையாளராக திருமதி. ஆர்.உதயமலரும் வலிகாமம் கல்விவலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக திரு.கே.சிவகரனும் உட்பட 15 கோட்டக் கல்விப் பிரிவுகளிற்காக 15 கோட்ட ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஊடாக பாடசாலைகளில் சுற்றாடல் முன்னோடிக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுற்றாடல் சார் செயற்பாடுகளில் முன்னேற்ற நிலையொன்று ஏற்படுத்தப்படும்   என எமது பிராந்திய செய்தியாளர் செய்தி வழங்கியுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts