கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 2016/27 சுற்றறிக்கைப்படி, மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பரிந்துரைக்கு அமைவாகவும் மூன்று வருடங்களுக்கு (2024- 2026) செயற்படும் வண்ணம் யாழ் மாவட்டத்தில் சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகர், சுற்றாடல் முன்னோடி வலய மற்றும் கோட்ட ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான நியமனப் பத்திரம் வழங்கும் நிகழ்வு இன்று (07.06.24) யாழ்மாவட்ட செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் து.சுபோகரன் தலைமையில் இடம்பெற்றது.
இதில் பிரதம விருந்தினராக மாகாணக் கல்வித்திணைக்கள விஞ்ஞானப் பாட பிரதிக் கல்விக்பணிப்பாளரும், மாகாண சுற்றாடல் முன்னோடி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தருமான அ.நிருபராணி கலந்து கொண்டார்.
இன்றய நிகழ்வில் யாழ்மாவட்ட சுற்றாடல் முன்னோடி மாவட்ட ஆலோசகராக ப.அருந்தவமும்.
யாழ் கல்வி வலயசுற்றாடல் முன்னோடி ஆணையாளராக திருமதி.எஸ்.நவராஜாவும்,தீவகவலயசுற்றாடல் முன்னோடி ஆணையாளராக திருமதி.மேரி ரீத்தாவும். வடமராட்சி கல்வி வலயசுற்றாடல் முன்னோடி ஆணையாளராக திருமதி. ஆர்.உதயமலரும் வலிகாமம் கல்விவலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளராக திரு.கே.சிவகரன் உட்பட 15 கோட்டக் கல்விப் பிரிவுகளிற்காக 15 கோட்ட ஆணையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஊடாக பாடசாலைகளில் சுற்றாடல் முன்னோடிக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டு, சுற்றாடல் சார் செயற்பாடுகளில் முன்னேற்ற நிலையொன்று ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.