Tamil News Channel

சுற்றிவளைக்கப்பட்ட பாரியளவிலான மோசடி..!!

current

மின் உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் உலை எண்ணெய் திருடப்பட்டு, அவற்றை வேறு நிறுவனங்களுக்கு விற்கும் மோசடியொன்றை சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கெரவலபிட்டிய – யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

கொலன்னாவ பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் புலனாய்வுப் பிரிவு நேற்று (04.07) இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதோடு இந்தச் சுற்றிவளைப்பின் போது, ​​திருடப்பட்ட 33,000 லீற்றர் உலை எண்ணெயுடன் பவுசர் வாகனம் மற்றும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது பெரிய அனல் மின் நிலையமான கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் 300 மெகாவாட் கொள்ளளவை தேசிய அமைப்பிற்கு அனுப்புகிறது.

இந்த ஆலையில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உலை எண்ணெயினை திருடும் மோசடி கும்பல் பற்றிய தகவல் வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் இருந்து வௌியாகியிருந்தது.

மேலும் யுகதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் உலை எண்ணெய் வத்தளை, போபிட்டிய பிரதேசத்தில் உள்ள பவுசர் வாகன முற்றம் ஒன்றில் சாதுர்யமான முறையில் திருடப்பட்டு வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts