சுவிஸிள்உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் பல மில்லியன் பெறுமதியான கலைப்பொருட்களைக் கொள்ளையடித்த பிரித்தானியாவை சேர்ந்த இரு சகோதரர்களை சுவிஸ் பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த நபர்கள் கொள்ளையடித்த பொருட்களில் ஒரு கலைப்பொருளை 80,000 பவுண்ஸ்களுக்கு ஹொங்ஹொங் நாட்டில் விற்றுள்ளனர்.
மேலும் சுவிஸ் பொலிசாரிடம் சிக்கிய சகோதரர்கள், நீதிமன்ற விசாரணையின்போது தன் தம்பி கடனில் சிக்கியிருப்பதாகவும், அவரைத் தப்புவிக்க, சுவிட்சர்லாந்திலிருந்து ஒரு பொருளைக் கொள்ளையடிக்கவேண்டும் என்றும் தனக்கு வந்த தொலைபேசி அழைப்பில் ஒருவர் கூறியதாகவும் தன் தம்பியைக் காப்பாற்றவேண்டும் என்று தான் அந்த கொள்ளையில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளனர்.
தங்களுடன் கொள்ளைச் சம்பவத்தில் பங்கேற்ற அந்த மூன்றாவது நபரின் பெயரைக் கூறவில்லை.
இது தொடர்பான் வழக்கு விசாரணைகளை சுவிஸ் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.