ஐக்கிய மக்கள் சக்தியில் இரண்டு புதிய உறுப்பினர்கள் நேற்றைய தினம் (16) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்து கட்சியில் இணைந்ததாக கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மேல் மாகாண சபையின் முன்னாள் அமைச்சருமான காமினி திலகசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
அவரைத் தொடர்ந்து கெஸ்பேவ மாநகர சபையின் முன்னாள் தவிசாளரும், மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான காமினி சில்வாவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார்.
தேர்தல் களம் சூடுபிடித்து வரும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைவது கட்சியை மேலும் வலுவடையச் செய்வதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.