January 23, 2026
சூறாவளியின் பின்னர் குடிநீரில் அவதானம் தேவை..!!
News News Line Top Updates உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

சூறாவளியின் பின்னர் குடிநீரில் அவதானம் தேவை..!!

Dec 20, 2025

அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய சூழலில் குடிநீரில் கவனம் வேண்டும் என மருத்துவ கலாநிதி வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

வெள்ளப்பெருக்குக்கு பின்னரான காலப்பகுதியில் குடிநீர்களை பருகும் போது வாந்தி, வயிற்றோட்டம் போன்ற நோய்களுக்கு மக்கள் முகங்கொடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் மக்கள் சுத்தமான நீரைப் பருகுவதையும் தமது அன்றாட வாழ்க்கையில் எடுத்துக் கொள்வதையும் உறுதிப்படுத்த வேண்டும் என மருத்துவ கலாநிதி வாசன் ரட்ணசிங்கம் வலியுறுத்தியுள்ளார்.

நீரைக் கொதிக்க வைத்து ஆறவைத்து எடுத்துக் கொள்வது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீரினால் பரவுகின்ற நோய்களை இதன் மூலம் கட்டுப்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *