January 20, 2026
சூழ்ச்சியில் சிக்கியுள்ள மைத்திரி..!
News News Line Top Updates இலங்கை அரசியல் புதிய செய்திகள்

சூழ்ச்சியில் சிக்கியுள்ள மைத்திரி..!

Apr 17, 2024

முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சூழ்ச்சி வலையில் சிக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

இந்த சூழ்ச்சித் திட்டம் காரணமாகவே கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தயாசிறி ஜயசேகரவை நீக்கியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் விளைவாக தற்பொழுது எதிர்வரும் தேர்தலில் வேறு கட்சிகளில் போட்டியிட முடியாத பொருத்தமற்றவர்கள் சிலர் கட்சியை பிடித்துக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவையும் அமெரிக்காவையும் மையப்படுத்தி இந்த சூழ்ச்சித் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *