செஞ்சோலை படுகொலையின் 18ஆம் ஆண்டு  நினைவேந்தல் நேற்றையதினம்  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நேற்று பிற்பகல் யாழ்ப்பாணம் முனியப்பர் கோவில் முன்றலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதன்போது உயிரிழந்தவர்களின் நினைவாக பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி தலைவி வாசுகி சுதாகரன், கட்சி உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here