நடைபெற்ற பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடரில் இஸ்லாமாபாத் யுனைடட் (Islamabad United) அணி கிண்ணத்தை வென்றுள்ளது.
நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடட் (Islamabad United) மற்றும் முல்தான் சுல்தான்ஸ் (Multan Sultans) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் இஸ்லாமாபாத் அணி 2 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற முல்தான் முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களை பெற்றது.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இஸ்லாமாபாத் 20 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று வெற்றியடைந்தது.
போட்டியின் ஆட்டநாயகனாக 5 விக்கட்டுக்களையும் வீழ்த்தி 19 ஓட்டங்களையும் பெற்ற இஸ்லாமாபாத் யுனைடட் (Islamabad United) வீரர் இமாத் வசிம் (Imad Wasim) தெரிவாகியிருந்தார்.
இத்தொடரின் நாயகனாக இஸ்லாமாபாத் யுனைடட் (Islamabad United) அணியின் சதாப் கான் (Shadab Khan) தெரிவாகியிருந்தார்.