Tamil News Channel

செம்பியனானது RCB..!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணி கிண்ணத்தை வென்றுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) மற்றும் ரோயல் செலஞர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் பெங்களூர் அணி 8 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி முதலில் துடுப்பெடுத்தாடி 18.3 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 113 ஓட்டங்களை பெற்றது.

டெல்லி அணி ஷஃபாலி வர்மா (Shafali Varma) 44 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்து வீச்சில் ஸ்ரெயன்கா படில் (Shreyanka Patil) 4 விக்கட்டுக்களையும், சோஃபி மொலினெக்ஸ் (Sophie Molineux) 3 விக்கட்டுக்களையும், சோபனா ஆஸா (Sobhana Asha) 2 விக்கட்டுக்களையும் பெங்களூர் சார்பாக வீழ்த்தியிருந்தனர்.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூர் 19.3 ஓவர்களில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

பெங்களூர் அணிக்கு துடுப்பாட்டத்தில் எல்லிஸ் பெர்ரி (Ellyse Perry) 35 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாகப் பெற்று கொடுத்தார்.

டெல்லி அணிக்கு ஸிகா பாண்டே (Shikha Pandey) மற்றும் மின்னு மணி (Minnu Mani) ஆகியோர் தலா 1 விக்கட்டை பெற்றுக் கொடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகியாக 3 விக்கட்டுக்களை வீழ்த்திய பெங்களூர் வீராங்கனை சோஃபி மொலினெக்ஸ் (Sophie Molineux) தெரிவாகியிருந்தார்.

தொடரின் நாயகியாக UP வோரியர்ஸ் (UP Warriorz) அணியின் தீப்தி சர்மா (Deepti Sharma) தெரிவாகியிருந்தார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts