செம்மணிப் போராட்டத்தில் குழப்பம்: அரசியல் இலாபத்துக்காக சிலர் இதை செய்கிறார்கள்– எம்.பி. க. இளங்குமரன் கண்டனம்!

0
3

செம்மணியில் இடம்பெற்ற போராட்டத்தில் அரசியல் இலாபங்களை பெறுவதற்காகவே சிலர் குழப்பங்களை விளைவித்திருந்ததாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மக்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நியாயமானது எனவும் அதனை திட்டமிட்டு குழப்புவதற்காக கிளிநொச்சியிலிருந்து குழுவொன்று செம்மணிக்கு அழைத்துவரப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறானவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மிக விரைவில் எடுக்கப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here