இந்தோனேஷியாவில் செல்ஃபி புகைப்படம் எடுக்க முயன்ற பெண் ஒருவர் எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்தோனேஷியாவின் – இஜென் எரிமலையை பார்க்கச் சென்ற பெண் ஒருவரே எரிமலை பள்ளத்தாக்கிற்குள் வீழ்ந்து இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்த 31 வயதான குறித்த பெண் இஜென் எரிமலை நீல நிறத்தில் காட்சியளித்ததை பார்த்து எரிமலைக்கு மிக அருகில் நின்று செல்ஃபி புகைப்படம் எடுக்க முயற்சித்துள்ளார்.
அபதன்போது அந்த பகுதியில் பலமான காற்று வீசியதில் பள்ளத்தாக்கிற்குள் தூக்கி வீசப்பட்டதனையடுத்து சுமார் 246 அடி பள்ளத்திற்குள் வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இரண்டு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் அவரின் சடலம் மீட்கப்பட்டு, சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.