இரண்டு மாதங்களில் செவ்வாய் கிரகத்தை சென்றடைய கூடிய புதிய விண்கலம் ஒன்றை நாசா தயாரித்து வருகின்றது.
நாசாவின் புதிய திட்டத்தின் படி தயாரிக்கப்படும் விண்கலம் இரண்டு மாதங்களில் பூமியிலிருந்து செவ்வாய் கிரகத்தை சென்றடையும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேற்படி பல்ஸ்டு பிளாஸ்மா விண்கலம் (Pulsed Plasma Rocket/PPR) என பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தின் தயாரிப்பு வேலைக்காக Howe Industries நிறுவனத்திற்கு நாசா நிதியுதவி அளித்துள்ளது.
அத்துடன் நாசா விஞ்ஞானிகள் புதிய விண்கலம் தொடர்பில் தெரிவித்ததாவது, “இந்த விண்கலத்தின் உந்துவிசை அமைப்பு மிகவும் சிறப்பானது மற்றும் அதிநவீனமானது. இது high specific impulse மூலம் பறக்ககூடியதுடன் இயந்திரத்தை இயக்குகிறது.
மேலும் விண்வெளி வீரர்கள் விண்மீன் காஸ்மிக் கதிர்களைத் தவிர்க்க அனுமதிக்கும் தொழில்நுட்பத்தை இது கொண்டுள்ளதன் மூலம் விண்வெளி வீரர்கள் நீண்ட நேரம் விண்வெளியில் பயணிக்க முடியும்.” என தெரிவித்துள்ளனர்.