February 11, 2026
சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு 15,000 வழக்குகள் நிலுவையில்!
புதிய செய்திகள்

சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு 15,000 வழக்குகள் நிலுவையில்!

Jun 25, 2024

ஊழியர் சேமலாப நிதியை செலுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிரான சுமார் 15,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக அரசாங்க பொதுக்கணக்குகளுக்கான குழு தெரிவித்துள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளுக்கான தொழிலாளர் திணைக்களத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, பாராளுமன்றத்தில் நடைபெற்ற இக்குழுவின் கூட்டத்திலேயே இத்தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

பதிவு செய்யப்பட்ட முகவர்களில் நிறுவனங்கள் செயற்படாமை, பணிப்பாளர்கள் அல்லது உரிமையாளர்கள் வெளிநாடுகளில் இருக்கின்றமை, நிறுவனங்கள் முழுமையாக நாட்டைவிட்டு வெளியேறுதல் போன்ற காரணங்களாலேயே வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.

மாவட்டங்களில் உள்ள ஊழியர் சேமலாப நிதிக் கட்டமைப்புக்களுக்கு குறித்த நிதியைச் செலுத்துவதற்கு தவறிய உரிமையாளர்கள் பற்றிய விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, பொதுக்கணக்குகளுக்கான குழு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *