யாழில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்து வந்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை பொது சுகாதார பரிசோதகர்களான கு.பாலேந்திரகுமார் மற்றும் கி.அஜந்தன் ஆகியோர் குறித்த பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதன்போது முறையான விதத்தில் இறக்குமதி செய்யப்படாத மற்றும் நிறக்குறியீடு இல்லாத வெளிநாட்டு சொக்லேட் வகைகள் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பவற்றை மீட்டிருந்தனர்.
இதனையடுத்து உரிமையாளருக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் தொடரப்பட்டது.
வழக்கு விசாரணைகளில் உரிமையாளர் குற்றங்களை ஏற்றுக்கொண்டதை அடுத்து, அவருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு நீதிமன்றத்தினால் ஒரு இலட்ச ரூபா தண்டப் பணம் அறவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.