இலங்கையில் இரண்டிற்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருப்பவர்களுக்கு பெரும் சிக்கல் காத்திருப்பதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கு குடியுரிமை பெற்றவர்கள் வெளிநாட்டவர்களாவர். இன்னுமொருசாரார் இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் அவர்கள் இலங்கையில் சொத்துக்களை வாங்க முடியும்.
வாடகை வருமான வரி அறவீட்டில் முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும், இரண்டிற்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருப்பவர்கள் வரி செலுத்த வேண்டிய நிலையேற்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், தரவுத்தளம் இல்லாத இலங்கை போன்ற நாட்டில் இவ்வாறான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் பெரும் சிக்கல் ஏற்படும் என்பதினை அரசாங்கம் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லை என்றும், இதன்மூலம் அரசாங்கம் எதிர்பார்க்காத பல சிக்கல்களை சந்திக்கும் என்றும் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.