November 18, 2025
சொந்த சாதனையை முறியடித்த SRH..!
News News Line Sports Top Updates புதிய செய்திகள்

சொந்த சாதனையை முறியடித்த SRH..!

Apr 16, 2024

2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) ஆகிய அணிகள் மோதியிருந்தன.

இப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி 25 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.

இதற்கமைய துடுப்பெடுத்தாடுய ஹைதராபாத் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை இழந்து 287 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பெங்களூரு 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஹைதராபாத் வீரர் ட்ரேவிஸ் ஹெட் (Travis Head) தெரிவாகியிருந்தார்.

இந்த வெற்றியுடன் ஹைதராபாத் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலின் நான்காவது நிலையில் உள்ளது.

நேற்றைய போட்டியில் IPL வரலாற்றில் அதிகபட்ச ஓட்டங்களை பெற்ற அணி என்ற சாதனையை ஹைதராபாத் அணி மீண்டும் பதிவு செய்துள்ளது.

இதற்கு முன்னர் ஹைதராபாத் 277 ஓட்டங்களைப் பெற்று இந்த சாதனையை பெற்றிருந்தது.

இன்றைய போட்டியில் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதலாவது நிலையில் உள்ள ராஜஸ்த்தான் ரோயல்ஸ் (Rajasthan Royals) மற்றும் 8 புள்ளிகளுடன் இரண்டாவது நிலையில் உள்ள கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதவுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *