2024 ஆம் ஆண்டிற்கான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) ஆகிய அணிகள் மோதியிருந்தன.
இப்போட்டியில் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணி 7 விக்கட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது.
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்றது.
பெங்களூரு அணி சார்பாக விராட் கோஹ்லி (Virat Kohli) 83 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக பெற்றார்.
பந்து வீச்சில் அன்றே ரஸ்ஸல் (Andre Russell) மற்றும் ஹர்சிட் ரானா (Harshit Rana) ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை கொல்கத்தா சார்பாக வீழ்த்தியிருந்தனர்.
தொடர்ந்து வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 16.5 ஓவர்களில் 3 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து 186 ஓட்டங்களை பெற்று வெற்றியடைந்தது.
கொல்கத்தா அணி சார்பாக துடுப்பாட்டத்தில் வெங்கடேஷ் ஐயர் (Venkatesh Iyer) 50 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார்.
பெங்களூரு அணிக்கு வைசாக் விஜய் குமார் (Vyshak Vijay Kumar), மயன்க் தாகர் (Mayank Dagar) மற்றும் யாஸ் தயால் (Yash Dayal) ஆகியோர் தலா ஒரு விக்கட்டை பெற்றுக் கொடுத்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக கொல்கத்தா வீரர் சுனில் நரேன் (Sunil Narine) தெரிவாகியிருந்தார்.
இந்த வெற்றியுடன் கொல்கத்தா அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது நிலையில் உள்ளது