2024 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றிபெற்றால் அது ஜனநாயகத்திற்கு ஆபத்தாக மாறும் என ஜனநாயக கட்சியினரின் கருத்தை முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நிராகரிப்பதாக நியுயோர்க்கின் இளம் குடியரசு கட்சியினர் கழகத்தில் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
நான் ஜனாதிபதியானால் ஜனநாயகத்திற்கு ஆபத்து என தெரிவிக்கப்படுவது வதந்தி எனவும் ஜனநாயக கட்சியினரின் தவறான பிரச்சாரம் எனவும் டிரம்ப் வர்ணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், தெரிவித்துள்ள டிரம்ப் ஜனநாயகத்திற்கு உண்மையான ஆபத்து தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே ஆனால் நான் அச்சுறுத்தல் இல்லை, நான் ஜனநாயகத்தை பாதுகாப்பேன், உண்மையான ஆபத்து நேர்மையற்ற ஜோ பைடனே எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.