நிதியை திருடியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார்.
‘x’ தளத்தின் ஊடாக இவ்வாறு பதிவொன்றை வெளியிட்ட நாமல், ஜனாதிபதி AKD தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டிய நேரம் இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உகாண்டா மற்றும் பல்வேறு நாடுகளில் பில்லியன் கணக்கான டொலர்களை நாங்கள் பதுக்கி வைத்துள்ளோம் என்று அவரது குழு பல ஆண்டுகளாக குற்றம் சாட்டி வருகிறது எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க கடந்த தேர்தல் காலங்களில் தெரிவித்திருந்த குறித்த விடயம் தொடர்பான காணொளி ஒன்றையும் நாமல் ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார்.
அந்த காணொளியில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பதுக்கி வைத்துள்ள பணத்தை வெளியில் கொண்டுவர வேண்டும் என அனுர குமார திஸாநாயக்கவும் அவரது கட்சி பேச்சாளர் ஒருவரும் தெரிவித்திருந்தனர்.