ஜனாதிபதித் தேர்தல்! பொதுவேட்பாளராகக் களமிறங்குவார் ரணில்..!

0
4

ஜனாதிபதித் தேர்தலே முதலில் நடைபெறும் எனவும், அதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராகவே களமிறங்குவார் என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? முதலில் இடம்பெறும் என்ற குழப்பம் உருவாகியுள்ளது.

இந் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாக ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதோடு அதற்கான  ஆயத்தங்களை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் கட்டக் கொடுப்பனவு ஜூலை மாதமளவில் இலங்கைக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

அந்தக் கொடுப்பனவு கிடைத்த கையோடு நிவாரணங்களை வழங்கி ஜனாதிபதித் தேர்தலை எதிர்கொள்ள விரும்புகின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

செப்டெம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில் செப்டெம்பர் மாதம் 18ஆம் திகதியை அண்மித்த தினத்தில் தேர்தலை நடத்தவே ஜனாதிபதி ரணில் விரும்புவதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட மாட்டார் எனவும், பொதுவேட்பாளராகவே களமிறங்குவார் எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here