February 11, 2026
ஜனாதிபதியிடம் கடும் தொனியில் உரையாற்றிய சம்பந்தன்
News News Line Top இலங்கை அரசியல் புதிய செய்திகள்

ஜனாதிபதியிடம் கடும் தொனியில் உரையாற்றிய சம்பந்தன்

Dec 22, 2023

அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடி’யைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள் என நேற்று (21) மாலை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற, ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பில் இரா சம்மந்தன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

வடக்கு- கிழக்கு மாகாணங்கள் மீள இணைக்கப்பட்டு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற எங்கள் நிலைப்பாட்டில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

அரசியல் தீர்வற்ற வெறும் ‘நல்லிணக்கக் கொடி’யைக் காண்பித்து எங்களைத் தொடர்ந்தும் ஏமாற்ற முயலாதீர்கள். நாம் தொடர்ந்தும் ஏமாறத் தயாரில்லை.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உள்ளடங்கலாகப் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தராத உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் சர்வதேச மேற்பார்வை மற்றும் புதிய நீதிமன்ற முறைமை உள்வாங்கப்பட வேண்டியது அவசியம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *