ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியாக நம்புவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு தாம் ஆதரவளிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
மேலும், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான தீர்மான விண்ணப்பத்தை தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ தன்னிடமோ அல்லது அவரது சட்டத்தரணிகளிடமோ கலந்தாலோசிக்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.







