ஜனாதிபதியின் வெசாக்தின வாழ்த்துச்செய்தி….
வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும்.
“சப்பத்த சம்மானசோ” என அனைவரையும் சமமாக நடத்தும் பௌத்த உபதேசத்தை இன்று நாம் நினைவுகூர வேண்டும்.
இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்நாட்டைத் தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும். அதற்குப் புத்தரின் போதனைகள் வழிகாட்டும்.
விரைவான பௌதிக வளர்ச்சியை நோக்கி நகரும் உலகில் ஆன்மீக மற்றும் கண்ணியமான ‘மனிதனை’ உருவாக்குவதே இந்த வெசாக் பண்டிகையின் முக்கிய நோக்கம் என்பதை நினைவில் வைத்து, அனைவருக்கும் சிறந்த வெசாக் பண்டிகை வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்று தனது வாழ்த்து செய்தியில் ஜனாதிபதி தெரிவித்தார்.
![]()