பாடசாலை மாணவர்களுக்கான ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வுகள் இரண்டு கட்டங்களாக கிளிநொச்சி தனியார் விருந்தகம் ஒன்றில் நடைபெற்றது.

கிளிநொச்சி வடக்கு வலயத்திற்கு காலை 9.00மணிக்கும் கிளிநொச்சி தெற்கு வலயத்திற்கு காலை 11.00மணிக்கும் இருவேறு நிகழ்வாக இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 662 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிகழ்வின் விருந்தினர்களாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சாள்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் புலமைப்பரிசில் வழங்கி வைத்தார்கள்.

குறித்த நிகழ்வில் ஜனாதிபதியின் வடக்குக்கான சிரேஷ்ட மேலதிக செயலாளர் சமன் பந்துலசேன,வடமாகாண ஆளுநரின் செயலாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.