நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் அவரது தலமையில் உருவாக்கப்படும் அரசாங்கத்தில் பிரதமர் பதவி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கே வழங்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெற்றி பெறுவதற்கு முன்னரே பதவிகள் தொடர்பில் கட்சிக்குள் பேச்சுவார்த்த்தைகள் இடம்பெறுகின்றன.
எதிர்வரும் 21ம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பின் தள்ளும் முயற்சியிலேயே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இறங்கியுள்ளது.
எவ்வாறயினும் புதிய ஆய்வுகளின்படி எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இருப்பதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.