Tamil News Channel

ஜப்பானில் கடுமையான பனிப்புயல்..!

557ec336-aea6-44ec-b5c0-bd3367f676b2

ஜப்பானில் இந்த மாதம் தொடங்கி கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமே உள்ளிட்டவற்றில் கடுமையான பனிப்புயல் வீசியுள்ளது. இதன் காரணமாக அங்குள்ள சாலைகள், ரயில் தண்டவாளங்கள் ஆகியவை போர்வை போர்த்தியபோது போல பனி மூடியுள்ளது.

இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பஸ்கள், புல்லட் ரயில் முதலிய பொது போக்குவரத்து சேவை தடை செய்யப்பட்டு மீண்டும் இயக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டு ஒன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்தநிலையில் ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts