ஜப்பான் ஒரு மரண தண்டனை கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தன.

2022 க்குப் பிறகு முதல் முறையாக ஜப்பான் மரண தண்டனையை அமல்படுத்தியுள்ளது.

நீதி அமைச்சகம் தூக்கு தண்டனையை உறுதிப்படுத்த மறுத்துவிட்டாலும், அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி, கைதி 34 வயதான தகாஹிரோ ஷிரைஷி என்றும், அவர் 2017 இல் 09 பேரைக் கொன்றார் என்றும் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

ட்விட்டர் கொலையாளி” (Twitter killer) என்று அழைக்கப்படும் ஷிரைஷி, சமூக ஊடக தளத்தில் (தற்போது X என்று அழைக்கப்படுகிறது) சந்தித்த 09 பேரைக் கொன்று, உடல் உறுப்புகளை துண்டித்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஷிரைஷி, 15 முதல் 26 வயதுக்குட்பட்ட பெண்களை, டோக்கியோவிற்கு அருகிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்று, அவர்களைக் கொன்று, அவர்களின் உடல்களை துண்டு துண்டாக வெட்டிச் சாய்த்ததாகக் கூறப்படுகிறது.

ஊடக அறிக்கைகளின்படி,  தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களிடம் ட்விட்டரில் தொடர்பு கொண்டு, அவர்கள் இறக்க உதவுவதாக கூறி, பின்னர் தனது சிறிய குடியிருப்பில் வைத்து 09 பேரைக் கொலை செய்ததாகவும்,  குளிர்சாதன பெட்டிகளில் அவர்களின் உடல் துண்டுகளை மறைத்து வைத்ததாகவும் அவர் ஒப்புக்கொண்டிருந்தார்.

ஏழு தொழில்மயமான பொருளாதாரங்களின் குழுவில் ஜப்பானும் அமெரிக்காவும் மட்டுமே மரண தண்டனையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் நாடுகள் ஆகும்.

இந்த நடைமுறைக்கு பெரும்பாலான மக்களின் ஆதரவு உள்ளது, மேலும் 2024 ஆம் ஆண்டு ஜப்பானிய அரசாங்கத்தின்  பதிலளித்தவர்களின் கணக்கெடுப்பில் 83% பேர் அதாவது 1,800 பேர் மரண தண்டனை “தவிர்க்க முடியாதது” என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here