Tamil News Channel

ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு தடை..!

பங்களாதேஷில் கடந்த 15-ம் திகதி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகிகள் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் 30 சதவீத இடஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர்.

 மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையால் 150-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த வன்முறைக்கு காரணமான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் மாணவர் அமைப்பான இஸ்லாமிக் சதாரா ஷிபிர் என்ற அமைப்பை பங்களாதேஷ் அரசு இன்று தடை செய்யுமாறு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும், நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜமாத் இ இஸ்லாமி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், அவாமி லீக் தலைமையிலான ஆளும் கூட்டணியின் முடிவு சட்டவிரோதமானது, சட்டத்திற்குப் புறம்பானது மற்றும் அரசியலமைப்பிற்கு விரோதமானது என தெரிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts