அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி அக்ரோ ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு நேரில் சென்று அதன் உற்பத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தார்.
வடமாகாணத்தில் முதன்முறையாக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘லங்காஜம்போ’ நிலக்கடலை உற்பத்தி முறையானது கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி ஏற்றுமதி பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார்.
இதனடிப்படையில் ஜம்போ நிலக்கடலை உற்பத்தி நிறுவனத்தின் கோரிக்கைக்கு அமைவாக மேம்பாடுகளை அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை எடுத்து வருகின்றார் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.