ஜம்மு காஷ்மீரில் நள்ளிரவு 12.38 மணியலவில் (04) 3.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதென நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் உண்டான சேதங்கள் குறித்து இதுவரை தகவல் ஏதும் கிடைக்கப்படவில்லையென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், அதனை தொடர்ந்து இரு நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதென நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
அதில் முதலாவது நில அதிர்வு 4.4 ரிக்டர் ஆகவும் இரண்டாவது நில அதிர்வு 4.8 ரிக்டர் ஆகவும் பதிவாகியிருந்தன.