மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை உத்தியோகத்தர் சிறைச்சாலையில் கடமையில் இருந்த நிலையில் சிறைக்காவலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன், அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் அநுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post Views: 2