ஜிம்பாப்வேயின் ரிசர்வ் வங்கி புதிய பண அலகு ஜிம்பாப்வே தங்கத்தை (ZiG) அறிமுகப்படுத்தியுள்ளது.
குறித்த நாணயமானது நேற்று(30) வெளியிடப்பட்டுள்ளதுடன் டொலருக்கு பதிலாக புதிய நாணயமாக ஜிக் என்ற பெயரில் புதிய நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன.
ஜிம்பாப்வேயில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகின்ற நிலைமையிலும் இந்த பண அலகு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் மாதமே ஜிம்பாவேவின் இந்த ஜிக் நோட்டுகள் மின்னணு முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மக்கள் பயன்படுத்தும் வகையில் புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.