ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் கணவரது புகைப்படங்களை எல்லாம் நீக்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதுடன், சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, பின்பு மனக்கஷ்டம் காரணமாக பிரிந்து விடுவது அதிகமாகிக்கொண்டே வருகின்றது.
நடிகர் இமான், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் பாலா, சமந்தா, சமீபத்தில் ஜீ.வி.பிரகாஷ், என பல ஜோடிகள் பிரிந்துள்ளனர்.
தற்போது இந்த பட்டியலில் நடிகர் ஜெயம் ரவியின் பெயரும் வந்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டதுடன், இவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கின்றனர்.
இந்த ஜோடிகள் தற்போது விவாகரத்து செய்வதாக பேச்சு அடிபட்டு வந்த நிலையில், சமீபத்தில் ஜெயம் ரவியின் மனைவி புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு பதிலடி கொடுத்திருந்தார்.
தற்போது ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கியிருக்கிறார்.
இது, ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருப்பினும் இன்ஸ்டாகிராம் பயோவில் இருக்கும் கணவரின் ஐடியையும், அவரது பெயருக்கு பின்னால் இருக்கும் ரவி என்ற பெயரையும் நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.