Tamil News Channel

ஜெர்மனியில் புறாக்களைக் கொல்ல நடவடிக்கை!

german

ஆரம்ப காலங்களில் ஜெர்மனியில் வளர்ப்பு பறவைகளில் ஒன்றாக காணப்பட்ட புறாக்கள் தற்போது மனிதர்களுடன் சிக்கலான உறவைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிலர் புறாக்கள் தம்மை எரிச்சலூட்டுவதாகவும் அச்சுறுத்தலாக அமைவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், ஏனையவர்கள் தங்கள் உணவை பறவைகளுடன் பகிர்ந்துகொள்வதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு ஜெர்மனிய மாநிலமான ஹெஸ்ஸியில் உள்ள லிம்பர்க் அன் டெர் லான் நகரிலே இவ்வாறானதொரு நிலை காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத் தேர்தலுடன் இணைந்து கடந்த 9 ஆம் திகதி நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், லிம்பர்க் குடியிருப்பாளர்கள் நகரிலுள்ள புறாக்களை கொல்வதற்கு வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், புறாக்களை கொல்வதற்கு எதிராக சில குடியிருப்பாளர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், புறாக்களை கொல்வது கொடூரமானது மற்றும் பயனற்றது எனவும் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, இத்தகைய முயற்சிகள் புறாக்களின் எண்ணிக்கை நிலையானதாக அல்லது அதிகரிக்கலாம் என்று வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புறாக்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு லிம்பர்க் அன் டெர் லான் நகர சபை நடவடிக்கை எடுத்தது.

நகர சபையின் ஆரம்பத் திட்டத்தை தொடர்ந்து விலங்கு உரிமை ஆர்வலர்கள் இந்த தீர்மானத்தை கடுமையாக எதிர்த்தனர்.

இந்த சர்ச்சை மற்றும் எதிர்ப்பு சர்வஜன வாக்கெடுப்பை நடாத்துவதற்கு வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts