நேபாளத்தில் உள்ள சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கதிற்கு டிக்டொக் செயலி தீங்கு விளைவிப்பதாக கூறி நேபாள அமைச்சரவை கூட்டத்தில் அதை தடை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனை நேபாள தகவல் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், நேபாளத்தில் 2019 இலிருந்து டிக்டொக்கில் 1629 சைபர் குற்றச்சாட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவிக்கின்றது.
டிக்டொக்கை இந்தியா 2021 இலும், ஆப்கானிஸ்தான் 2022 இலும் தடை செய்ததை தொடர்ந்து டிக்டொக்கினை தடை செய்த மூன்றாவது தெற்காசிய நாடாக நேபாளம் மாறியுள்ளது.
இந்த சூழ்நிலையிலும் நேபாளத்தில் தனது ஆதிக்கங்களை அதிகரிக்க சீனா தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருகிறது.