அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ட்ரம்ப் நலமுடன் இருப்பதை அறிந்து தாம் நிம்மதியடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரசியல் முரண்பாடுகள் காரணமாக இலங்கையர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அனைவரும் சட்டங்களை கடைபிடிக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.