July 8, 2025
டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..!
World News புதிய செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு..!

Aug 20, 2024

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றிப் பெற்றால் எலான் மஸ்க்கிற்கு அமைச்சர் பதவி வழங்குவேன் என டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குடியரசுக் கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹரிஸும் போட்டியிடவுள்ளனர்.

வேட்பாளர்கள் இருவரும் அடுத்தடுத்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ட்ரம்ப் ஜனாதிபதித் தேர்தலில் தான் வெற்றி பெற்றால், எலான் மஸ்க்கிற்கு அமைச்சரவையில் ஒரு பதவியையோ அல்லது வெள்ளை மாளிகை ஆலோசகர் பதவியையோ ஏற்றுக்கொள்ள வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *