டொராண்டோவில் இருந்து 35,000 குடும்பங்கள் வெளியேற்றம் !
கனடாவின் டொராண்டோ பகுதியில் கடந்த வருடம் 35,000 க்கும் அதிகமான குடும்பங்கள் வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த குடும்பங்கள் பெரும்பாலானவை கனடாவின் பிற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளன.
புதிய தரவுகளின் படி, 2024 முதல் காலாண்டு முதல் 2025 முதல் காலாண்டு வரை, டொராண்டோ பகுதியிலிருந்து மொத்தம் 2.5 இலட்சம் குடும்பங்கள் குடிபெயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், 68,173 குடும்பங்களில் 51.5% (35,140) முழுமையாக டொராண்டோவை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
குறித்த பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நகரங்களில் இருந்து கிராம பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர், இதன் காரணமாக நகரின் மக்கள் தொகை குறைந்துள்ளது.
இந்த தரவுகள் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் அறிக்கைகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளன.
சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டதுபோல், நாளாந்த செலவின் உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவின் அதிகரிப்பு காரணமாக மக்கள் டொராண்டோவை விட்டு வெளியேறுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
![]()