Tamil News Channel

தங்கராசா ஐங்கரதீபன் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்…..!

IMG-20240625-WA0040

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் கிழக்கு,  கொட்டைடையை சொந்த இடமாகவும், தற்போது ஏழாலை மத்தியை வதிவிடமாகவும் கொண்ட தங்கராசா ஐங்கரதீபன் சமாதான நீதவானாக கடந்த 18/06/2024 அன்று மல்லாகம் கௌரவ மாவட்ட நீதிபதி பெ.சிவகுமார் முன்னிலையில் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப் பிரமாணம்  செய்து கொண்டார்.

1987/12/29 ம் நாள் பிறந்த இவர் ஆரம்ப கல்வியை யா.அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில்  தரம் 4 வரை கற்று பின்னர் அங்கிருந்து 1996 ம் ஆண்டு இடம் பெயர்நது முல்லைத்தீவு மாவட்டம் தேவிபுரம் அ.த.க. பாடசாலை, வள்ளிபுனம் கனிஸ்ர உயர்தர பாடசாலை ஆகியவற்றில்  கல்வி கற்று அங்கிருந்து மீண்டும் சொந்த இடமான யாழ்ப்பாணம் அம்பன் பகுதிக்கு 2002 ம் ஆண்டு வருகைதந்து அங்கு தரம் 10 இலிருந்து க.பொ.த உயர்தரம் வரை கல்வி கற்றார்.

பின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில்  நாடகமும் அரங்கியலும் துறையில் 2013 ம் ஆண்டில்  கலைமானி விசேட பட்டமும்,  இலங்கை திறந்த பல்கலைக்ழகத்தில்   பட்டப்பின் கல்வி பட்டமும், (PGDE), அயர்லாண்ட் தேசிய பல்கலைக்கழகத்தில் உளவியல் பட்டமும், பேரதெனியா பல்கலைக்கழகத்தில் தமிழ் துறையில் பட்டமும் பெற்ற அவர் பேரதெனியா பல்கலைக் கழகத்தில்  முதுகலைமானி பட்டத்தையும் பெற்று தற்போது முதுகலை தத்துவவியல் மாணவனாகவும் உள்ளார்.

இவர் இரத்தினபுரி கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் ஆறு வருடங்கள் ஆசிரியராக பணியாற்றி 2019 அம் ஆண்டு இடமாற்றம் பெற்று  இன்றுவரை கிளிநொச்சி பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணியாற்றுகின்றாரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts