Tamil News Channel

தங்கலானை தட்டி கழித்த நடிகை…!

rashmika220422_1

தங்கலான் படத்திற்காக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மாளவிகா மோகனன் இந்த படத்தில் நடிக்க முதலில் தேர்வு செய்யப்படவில்லையாம்.

படத்தில் ஆரத்தி வேடத்தில் நடிக்க முதலில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை இயக்குனர் அணுகி இருக்கிறார்.

அந்த வேளையில் ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் நடித்து கொண்டு இருந்ததால் தங்கலான் படத்தில் நடிக்கமுடியாமல் போனதாக கூறப்படுகிறது.

மேலும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து ஆகஸ்ட் மாதம் வெளிவந்த படம் தங்கலான். ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளமையுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டகிரோன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக வசூலையும் குவித்தது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts