உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற,இறக்கத்துடன் காணப்படும் நிலையில் நேற்று(19) இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிரடியாக உயர்வடைந்துள்ளது.
இதன்படி, இலங்கையில் நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 650,652 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய நிலவரத்தின்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 22,960 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 183,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கம் ஒரு கிராம் 21,050 ரூபாவாகவும் ஒரு பவுண் 168,400 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,090 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் ஒரு பவுண் 160,750 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
எனினும் தங்க ஆபரணங்களின் விலை இந்த விலைகளிலிருந்து மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.