தடைசெய்யப்பட்ட மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்களுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் முல்லேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் பேலியகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றியவர் எனவும் பூகொடை பொலிஸ் நிலையத்தில் விசேட கடமைகளுக்காக நியமிக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொலிஸருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மோட்டார் சைக்கிளின் உதிரிப்பாகங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.