இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாடளாவிய ரீதியில் தடையின்றி எரிபொருள் விநியோகத்தை தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரிவிக்கையில், அனைத்துப் பொருட்களின் கையிருப்பையும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பராமரிப்பதால், தடைகளற்ற எரிபொருள் விநியோகம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், வருடாந்த பராமரிப்பு மற்றும் சேவைக்கு உட்பட்ட சுத்திகரிப்பு நிலையம் இம்மாதம் நடுப்பகுதியில் அதன் செயல்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம், சீன பெட்ரோலியம், கெமிக்கல மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட RM Parks Inc. ஆகியவற்றின் பங்குகள் மற்றும் சரக்கு திட்டங்களும் மதிப்பாய்வு செய்யப்பட்டதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.