2024 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட கூடாதென கடந்த மாதம் கொலராடோ உச்ச நீதிமன்றம் தடை உத்தரவை விதித்திருந்தது.
இதனை இரத்து செய்யுமாறு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
நீதிமன்றமானது ட்ரம்பை அரசியலமைப்பின் கிளர்ச்சியாளரெனவும் ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமான வேட்பாளர் இல்லையெனவும் அறிவித்திருந்தது.
மேலும் அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தச்சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல் தடவையாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.